ஐந்து கரத்தனை ஆணை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எய்ற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தனை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே

 

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா பெருங்குடி கிராமத்தில் அருள்பாலித்து வரும் ஸ்ரீ வேண்டிவந்த அம்மன் ஆலயத்திற்கு புதிய வைரதேர் திருப்பணி ஜய அண்டு கார்த்திகை மாதம் 24ஆம் தேதி 10.12.2014 புதன் கிழமை காலை சுபமுகூர்த்த நேரத்தில் தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபேற்று வருகிறது.

வேண்டியவரம் தரும் ஸ்ரீ வேண்டிவந்த அம்மன் திருத்தேர் திருப்பணி சுமார் 50/-லட்சம் மதிப்பீட்டில் திருத்தேர் திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகிறது அம்மனின் ஆன்மிக பக்தர்கள் அனைவரும் திருத்தேர் திருப்பணியில் பங்குபெற கேட்டுகொள்கிறோம்.

திருத்தேர் திருப்பணிக்கு நன்கொடைகள் பொருட்கள் உபயமாக பெறபடுகின்றன .

நன்கொடை பொருட்கள் ரூபாய் 50/-ஆயிரத்திற்கு மேல் வழங்குபவர்களுக்கு ஸ்ரீ வேண்டிவந்த அம்மன் உருவம் பொறிக்கப்பட்ட செம்பு பட்டயம் தங்கள் பூஜை அறையில் வைத்து வணங்கும் அளவுக்கு வழங்கப்படும் மற்றும் கல்வெட்டிலும் பெயர் பொறிக்கப்படும்.

நன்கொடைகள் ரூபாய் 25/-ஆயிரத்திற்கு மேல் வழங்குபவர்களுக்கு கல்வெட்டில் பெயர் பொறிக்கப்படும்.

வேண்டியவரம் தரும் ஸ்ரீ வேண்டிவந்த அம்மன் திருத்தேர் திருப்பணியில் பங்குகொண்டு அம்மனின் அருளையும் ஆசியையும் பெற்று பல நூற்றாண்டு புகழோடு வாழ பிரார்த்திகிறோம் அனைவரும் வாருங்கள் திருத்தேர்பணியில் பங்குபெருங்கள் .

இப்படிக்கு

ஸ்ரீ வேண்டிவந்த அம்மன் ஆலையத்தை சார்ந்த பெருங்குடி ஊரார்கள் 18 பட்டி கிராமத்தார்கள் .