ஸ்தல வரலாறு:

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா, பெருங்குடி வட்டம், பெருங்குடி கிராமம் மிகவும் தொண்மையான கிராமம். காற்காலர்கள் பெரியகுடியாக இருந்ததாலும், 18பட்டிகிராமங்களுக்கு தலைமைகுடியாக இருந்ததாலும் – பெருங்குடி – எனபெயர்காரணமாயிற்று.

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு பெருங்குடிக்கு மேற்கே பெருங்குடிக்கன்மாய்க்கு மேல்புறம் முனசந்தைக்கு அருகில் உள்ள அருள்மிகு வீரம்மாகாளியம்மன் திருக்கோவில் பெருங்குடிஊர் அம்பலகாரர்க்கு குலதெய்வமாகவும், 18பட்டிகிராமத்தார்க்கு கிராமதெய்வமாகவும் இருந்துள்ளது. அருள்மிகு வீரம்மாகாளியம்மன் கோயிலில் அம்பலகாரர்க்கு முதல்மரியாதையுடன் அனைத்து உரிமைகளும் வழங்கப்பட்டு வந்துள்ளது, வீரம்மாகாளியம்மன் கோவிலில் வழங்கப்பட்ட அணைத்து கோவில் மரியாதைகளும் ஒரு விழாகாலத்தில் மறுக்கப்பட்டது. ஆலயம் சென்று தரிசிக்கவும் வாய்ப்பு இல்லாமல் போனது.

அம்பலகாரர் வீரம்மாகாளியம்மனை தருசிக்க முடியாமல் பலநாள் அன்ன ஆகாரம் இல்லாமலும் ஊன் உறக்கம் இல்லாமலும் இருந்து கவலையில் வீரம்மாகாளியம்மனை வேண்டியபடி இருந்துள்ளார். அம்பலகாரர் மற்றும் கிராமாதர்களின் கவலையை போக்கவும் வேண்டுதலை நிறைவேற்றுவதற்கும் அருள்மிகு வீரம்மாகாளிஅம்மன் அம்பலகாரர்கனவில் தோன்றி பெருங்குடிக்கு மேற்கே வனத்தில் குட்டைக்கு அருகில் ஒருபாளைமரக்கன்று ஒன்று உள்ளது அதன் அருகில் ஒரு பிரம்பும் விபூதிபையும் இருக்கும் நீ போய்பார் அந்த இடத்தில் எனக்கு ஆலயம் எழுப்பி வணங்கி வா உன்கவலையை போக்கநான் இருக்கிறேன் என்று சொல்லிமறைந்தது.

அம்பலகாரர், காலையில் எழுந்து ஊர் பெரியவர்களை அழைத்துக்கொண்டு கனவில் ஸ்ரீவீரம்மாகாளி அம்மன் சொன்ன இடத்தில் பார்த்துள்ளனர். ஸ்ரீவீரம்மாகாளிஅம்மன் கனவில் சொன்னதுபோலவே முட்புதரும் வனமுமாக இருந்தகுட்டைக்கு அருகில் பாளைமரக்கன்றின் அடியில் பிரம்பும் விபூதியும் இருந்ததைக்கண்டு அதிசயித்து வீரம்மாகாளியே! வேண்டிவந்தவளே!! எங்கள்தாயே!!! என்று மகிழ்ச்சியில் அதிசயித்து ஆனந்தமடைந்தனர்.

ஸ்ரீ வீரம்மாகாளி அம்மன் அம்பலகாரர் வேண்டிவந்ததால், அன்று முதல் ஸ்ரீவேண்டிவந்த அம்மன் என்ற திருநாமத்தில் பனை ஓலையால் ஆலயம் அமைத்து மண்சிலைவைத்து பூஜைபுனஷ்க்காரங்கள் செய்தும், திருவிழாக்கள்நடத்தியும், வழிபட்டுவந்துள்ளார்கள்.

காலபோக்கில் ராயவரம் நகரத்தார்கள் பெருங்குடியை சேர்ந்த கிராமங்களில் விவசாய பண்ணைநிலங்களை அமைத்தும் பெருங்குடியில் பண்ணைவிடுதிகள்(வீடுகள்) அமைத்தும் சிறப்பாக வாழ்ந்துவந்துள்ளார்கள்.

ராயவரம்நகரத்தார்கள் ஸ்ரீவேண்டிவந்த அம்மனுக்கு ஓலைகுடிசையிலேயே மண்சிலைக்குப்பதில் கற் ச்சிலை அமைத்தும், திருவிழாவை சிறப்பாக நடத்துவதற்கும் ஸ்ரீவேண்டிவந்தவள் திருவீதி உலாவருவதற்கும் சுவாமி அம்பாள்விக்ரகமும் அலங்காரநகைகளும் சுவாமி அம்பாள் எழுந்தருளகாளை, அன்னம், குதிரை, யாளி, கேடயம், பல்லக்கு போன்றவாகனங்களும், சகடை, திருத்தேர் ஆகியவைகளை உபயமாககொடுத்தும். சுவாமி அம்பாள்திருவீதி உலா வருவதற்கு நான்கு வீதிகளை அமைத்தும் ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் திருவிழாவை அனைத்து மக்களோடும் நடத்திவந்துள்ளார்கள்.

ஆதிகாலத்தில் குட்டையாக இருந்ததை பெரிய ஊரணியாக அமைத்து அதன்கரையில் பிள்ளையார்கோவிலும் நகரத்தார்கள்கட்டியுள்ளார்கள், அதுவேதற்போது குடிநீர் ஊரணியாக உள்ளது.

பிறகு, ஸ்ரீவேண்டிவந்த அம்மனுக்கு ஊரார்கள் மற்றும் ஆன்மிகப்பெரியவர்களின் பெரும் முயற்சியால் 1969-ஆம் ஆண்டு மூலஸ்தானம், அர்த்தமண்டபம் செங்கற்கற்களால்கட்டியும், மூலஸ்தானகோபுரம்சிறிதாகவும், மஹாமண்டபம் ஓட்டுக்கட்டிடமாகவும் கட்டி மஹாகும்பாபிசேகம் நடத்தியுள்ளார்கள். 1988-ஆம் ஆண்டுஆலயத்திற்கு சுற்றுச்சுவர்கட்டியும், 1993-ஆம் ஆண்டு மஹாமண்டபம் தார்சுகட்டிடமாககட்டியும், சக்திவிநாயகர், பெரியகருப்பர் ஆகிய தெய்வங்களுக்கு தனித்தனியாக ஆலயங்கள் கட்டியும் மஹாகும்பாபிசேகம் நடத்தியுள்ளார்கள். 2007-ஆம் ஆண்டு மூலஸ்தானகோபுரம் பெரியதாககட்டப்பட்டு மஹாகும்பாபிசேகம் நடத்தப்பட்டுள்ளது. 2010-ஆம் ஆண்டு வசந்தமண்டபம் கட்டி அழகு பார்க்கப்பட்டது(முத்தழகுபட்டர் சுப்புலட்சுமியின் சஷ்டியப்த பூர்த்தி நினைவாக ).

திருவிழாக்கள் பங்குனிமாதம் முதல் திங்கள்கிழமை முளைப்பாரிபோட்டு அதற்கு முந்தய இரவு ஞாயிற்றுகிழமை 18 பட்டி கிராமத்தார்களின் பூச்சொரிதல்விழாவும், அடுத்த ஏழுநாட்களுக்கு அபிஷேக ஆராதனையுடன் ஆலயதிருவிழாநடைபெறும்.

பங்குனிமாதம் இரண்டாவது திங்கள், செவ்வாய், புதன்கிழமைகளில் சுவாமி அம்பாள் திருவீதி உலாவும், மஞ்சள்நீராட்டுவிழாவும், ஊஞ்சலாட்டுவிழாவும், முளைப்பாரிகொட்டுதலும், பால்குடம், காவடி, அக்னிக்காவடி போன்றவேண்டுதல்களும், மஞ்சுவிரட்டு மாட்டுவண்டி எல்கைபந்தயம், கரகாட்டம், கலைநிகழ்ச்சி, நாடகம் மற்றும் வாணவேடிக்கையும், அன்னதானமும் சிறப்பாகநடைபெறும்.

ஆடிமாதத்தில் மஹாகணபதி ஹோமம், ஸ்ரீதுர்க்காஹோமம், நவக்கிரகஹோமம், கோமாதாபூஜை, திருவிளக்குபூஜை ஆகியவைகள் சிறப்பாகநடைபெறும். பன்னிரண்டுமாதமும் பௌர்னமிபூஜை, மஹாகணபதிஹோமம், துர்க்காஹோமம், நவக்கிரகஹோமம், அபிசேக ஆராதனை, சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெறும், சித்திரை மாதவருடப்பிறப்புவிழா, திருக்கார்த்திகைவிழாநடைபெறும்.

ஸ்தலவிருட்சம் – பாலைமரம்:

பாலைமரம் இன்றும் பல கிளைகளுடன் உள்ளது.

திருக்கோவிலின்தனிச்சிறப்பு:

திருமணம் ஆகாதவர்கள் பாலைமரத்தில் மஞ்சள்கயிறு கட்டினால் விரைவில் திருமணம் நடக்கும். குழந்தைபேறு இல்லாதவர்கள் பாலை மரத்தில் தொட்டில் கட்டினால் குழந்தைபேறு கிடைக்கும்.